Thursday, April 8, 2010

நீயா ?நானா?

நலமா என்ற ஒற்றைச்சொல்போதும்
நம் மௌனங்களை உடைத்தெறிய ..
அதை முதலில் சொல்வது யார்?
நீயா? நானா  ?...
சன்னமாய் ஒரு புன்னகைபோதும்
சரளமாய்  நாம் உரையாட ..முதலில்
புன்னகை செய்வது யார்  ?
நீயா? நானா?
திருக்குறளாய் ஒரு குறுச்செய்திபோதும்
நம் கோபங்களைக் கலவாடிச்செல்ல..
முதலில் குறுச்செய்தி அனுப்புவது யார்?..
நீயா ?நானா?
இப்படியே நீள்கின்றன நம் நட்பின்
நாட்களும் நீயா?நானா ?என்று
நம்மைவிட்டு .........................!

Monday, February 15, 2010

நிலவின் சிதறிய வெளிச்சத்தில்
பிடித்தும் ..பிடிக்காமலும் ...
சிலநேரங்களில் நான் மட்டும் .

Thursday, January 21, 2010

எறும்புகள் ..

சத்தமில்லா ஒரு நீண்ட
ரயில் வண்டிப்பயணம்
சன்னலில் ..

Monday, January 11, 2010

அவள் ..

அவள் இன்றி எதுவும்
அழகில்லை என்வீட்டில் ..
அவள் இன்றி எதிலும்
அன்பில்லை என்வீட்டில் ..
அவள் இன்றி எவையிடத்தும்
ஆர்வமில்லை என்வீட்டில் ..
மொத்தத்தில் அவளின்றி எதுவும்
இயங்கவில்லை என்வீட்டில் ..

Monday, January 4, 2010

வேலி..

மண்ப்பார்க்க மழை வர ..
மழைக்குடிக்க மண்காத்திருக்க ..
மழைக்காளானோ குடையாய்
மண்மேலே ..

பால் அபிஷேகம்.

கோவிலின் உள்ளே குடம்
குடமாய்
பால் அபிஷேகம்
வெளியே பசியோடு
நிற்க்கும் ஏழைச்சிறுவன் ..

Wednesday, December 30, 2009

ப்ரியம்

பிடிவாதமாய் ப்ரியம் வைக்கிறாய்
ப்ரியம் வைத்தே பிடிவாதம் ..
செய்கிறாய் என்னிடம் நீ ..

Tuesday, December 29, 2009

உன் கண்கள் .

கூர்மையான ஆயுதம்
என்றும் ஆபத்தானதுதான் ..
கண்டுக்கொண்டேன் உன்
கண்களைக்கண்ட பிறகு ..

எப்படியோ சிக்கிக்கொண்டேன்
உன் விழிச்சிறையில் நான்
ஆயுள் கைதியாக ..

அடிப்பெண்ணே கயலுக்கும்
உவமை சொல்லலாம் உன்
கண்களை நீ சிம்மிட்டி
என்னைப் பார்க்கும்போது ..

Monday, December 28, 2009

பொய் ..

தெருவில் யாசிப்பவனிடம்
சில்லரை இல்லை என்று
சொன்னப்பின் நெருஞ்சி
முள்ளாய் குத்துகின்றன
ஒவ்வொரு சில்லரையும்
என் சட்டைப்பையில் .............

Wednesday, December 23, 2009

நேற்று இரவு ..

நேற்று இரவு நடந்து போகையில்
தொலைந்து போனேன் காட்டிற்குள்
சுற்றியும் கும்மிருட்டு என்னைச்சுற்றி ..
ஆந்தையின் அலறலோ அபாயகரமாக ..
சலங்கை சத்தம் சலசலப்பை உண்டுபண்ண ..
சரசரவென ஓடினேன் காய்ந்த சருகளின் மேல் ..
திடீரென எதோ ஒன்று என் கையை இழுக்க ..
கண்விழித்து எழுகையில் என்னருகே நீ..
என்ன என்றாய் தூக்கத்தில் நீயும் ..
ஒரு பயங்கிர கனவு என்றேன் நானும் ..
கடவுளே என்றாய் நீயும் சிரித்துக்கொண்டு ..
மீண்டும் தொலைவேனோ என்ற பயத்தில்
உன் கைபிடித்து உறங்கிப்போனேன் ..
விடியும் வரை நானும் !....